1. Home
  2. தமிழ்நாடு

நெய் விலை அதிரடி குறைப்பு -ஆவின் நிறுவனம் அறிவிப்பு..!

Q

விழா காலங்களில் ஆவின் பொருள்களுக்கு தள்ளுபடி விலை அறிவிப்பதை வாடிக்கையான ஒன்றாக ஆவின் நிறுவனம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் 26-ம் தேதி வரவுள்ள கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் அடுத்த மாதம் 7-ம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் நெய் விலையில் தள்ளுபடி அறிவித்துள்ளது

அதாவது 100 மில்லி லிட்டர் ஆவின் நெய்யில் ரூ.10 தள்ளுபடி செய்துள்ளது. அதன் படி, ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 மில்லி லிட்டர் நெய்யின் விலை ரூ.75 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தள்ளுபடியானது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணஜெயந்தி (ஆக.26-ந்தேதி), விநாயகா் சதுா்த்தி (செப்.7-ந்தேதி) உள்ளிட்ட பண்டிகை களை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like