1. Home
  2. தமிழ்நாடு

அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டி - கெஜ்ரிவால்..!

Q

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கத்தில் இந்தியா கூட்டணியை உருவாக்கினார்கள். நிதிஷ்குமார் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டார். தற்போது உ.பியின்முக்கிய கட்சியான ஆர்.எல்.டி கட்சியும் கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் இணையவுள்ளார்.
அதேபோல திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் தனித்தேபோட்டியிடுவோம் என அறிவித்து கிலியை கிளப்பினார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்து பரபரப்பைஉருவாக்கினார்.
இந்நிலையில், பகவந்த் மானின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு அறிவிப்பைவெளியிட்டுள்ளார். பஞ்சாப் அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாய விலை பொருள்கள் வீட்டுவாசலில் வழங்கும் திட்டத்தை அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்து பேசினார். அப்போது, “இரண்டுவருடங்களுக்கு முன்னதாக சட்டசபை தேர்தலில் உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது. 117 இடங்களில்92 இடங்களை ஆம் ஆத்மி பெற்று பஞ்சாபில் சாதனை புரிந்தது. தற்போது மக்களவைத் தேர்தல் இரண்டுமாதங்களில் நடைபெற உள்ளது.
இன்று மீண்டும் உங்கள் ஆசிர்வாதத்தை நாடி வந்திருக்கிறேன். பஞ்சாபில் 13 இடங்களும், சண்டீகரில் ஒரு இடமும்என மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி வரும் 10-15 நாள்களுக்குள் 14 தொகுதிகளிலும்தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் எங்களது கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறுகேட்டுக்கொள்கிறேன்‘ என்றார்.
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்றோரும்தனித்து செயல்படுவதாக அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது

Trending News

Latest News

You May Like