அமீர் கானின் தாயாருக்கு திடீர் உடல்நலக்குறைவு - சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் ஆமீர்கான் 'தங்கல்' 'பிகே', 'கஜினி' போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். தற்போது, 'கூலி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமீர்கானின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்கள் .
இந்த நிலையில், அமீர் கானின் தாயார் ஜீனத் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜீனத்-க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.