9 விருதுகளை அள்ளிய 'ஆடுஜீவிதம்'..!
தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான படம் தான் ஆடு ஜீவிதம். வெகுக்காலமாகவே ப்ரித்விராஜின் படங்கள் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. அப்படி வரவேற்பைப் பெற்றாலும் அது மலையாள சினிமாவுடனே நின்றுவிடுகிறது. அதனை உடைத்தெரியும் விதமாக பிரித்வி தனது திறமை மிகுந்த நடிப்பால் சலார் படத்தின் மூலம் மீண்டும் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் பிரபாஸுக்கு ஈடுக் கொடுத்து நடித்து, அந்தக் கதாப்பாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார் பிரித்வி. அந்தவகையில் பிரித்வியின் அடுத்தப் படமான The Goat Life படத்தின் அறிவிப்பு வெளியான முதலே நல்ல வரவேற்பைபெற்றது.
அதற்கு முக்கிய காரணமே, பிரித்விராஜ் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமானத் தோற்றத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் 2008ம் ஆண்டு மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் கதையின் உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் உருவாகியது.
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெளியானது.
நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ. 159 கோடிக்கு மேல் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படம் பல விருதுகளை வெல்லும் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், அதன்படி பல விருதுகளை அள்ளியுள்ளது. இந்த ஆண்டுக்கான 54வது கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் 9 விருதுகளை அள்ளியுள்ளது.
1. சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)
2. சிறந்த திரைக்கதை - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)
3. சிறந்த ஒளிப்பதிவு - சுனில் கே.எஸ் (ஆடுஜீவிதம்)
4. சிறந்த ஒலி கலவை - ரசூல் பூக்குட்டி, சரத் மோகன் (ஆடுஜீவிதம்)
5. சிறந்த ஒப்பனை - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)
6. சிறந்த இயக்குனர் - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)
7.சிறந்த நடிகருக்கான ஜூரி விருது - கே. ஆர். கோகுல் (ஆடுஜீவிதம்)
8.பிரபலமான படம் - ஆடுஜீவிதம்
மற்ற விருதுகள்
சுதி கோழிக்கோடு (காதல்)
சிறந்த படத்துக்கான ஜூரி விருது - ககனாச்சாரி
சிறந்த அறிமுக இயக்குனர் - பாசில் ரசாக் (தடவு)
நடன இயக்குனர் - விஷ்ணு (சுலைகா மன்சில்)
சிறந்த பெண் டப்பிங் கலைஞர் - சுமங்கலா (ஜனம் 1947 - பிரணயம் துடருன்னு)
சிறந்த ஆண் டப்பிங் கலைஞர் - ரோஷன் மேத்யூ (Ullozhukku),
ஒலி வடிவமைப்பு - ஜெயதேவ் சக்கடத், அனில் ராதாகிருஷ்ணன் (Ullozhukku)
Sync சவுண்ட் - ஷமீர் அகமது (ஓ பேபி)
கலை இயக்கம் - மோகன்தாஸ் (2018)
எடிட்டிங் - சங்கீதா பிரதாப் (லிட்டில் மிஸ் ராவ்)