1. Home
  2. தமிழ்நாடு

லட்சுமி கடாட்சம் ஏற்பட ஆடி வெள்ளி பரிகாரம்..!

1

ஒரு வீட்டில் பூஜையறை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு சமையலறையும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பூஜை அறை இல்லாத வீட்டை கூட பார்த்துவிடலாம். சமையலறை இல்லாத வீட்டை பார்க்கவே முடியாது. எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமையலறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு ஆரோக்கியம் மேற்படும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமயத்தில் பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாக பராமரிக்கிறோமோ அதே அளவிற்கு சமையலறையையும் பராமரிக்க வேண்டும். அப்படிப்பட்ட சமையல் அறையில் நாம் செய்யக்கூடிய சாதாரண வழிமுறை நமக்கு லட்சுமி கடாச்சத்தை ஏற்படுத்தும்.

அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய சமையலறையை மிகவும் சுத்தமாக பராமரித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களால் நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிந்தது. மகாலட்சுமி கடாட்சம் என்பது பணரீதியான செல்வத்தை மட்டும் தருவது அல்ல. நம்முடைய உடல் மனம் பொருள் ஆவி என்று அனைத்திற்கும் இணையான மகிழ்ச்சியை தரக்கூடியதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் மனிதர்களுக்கு முதலில் தேவைப்படுவது உண்ண உணவு. இந்த உணவை தரக்கூடியவளாக தான் அன்னலட்சுமி திகழ்கிறார். அன்னலட்சுமி வீற்றிருக்கும் இடம் நம்முடைய வீட்டில் சமையலறை தான். அதனால் நாம் எதை சுத்தமாக பராமரிக்கிறோமோ இல்லையோ சமையலறையை பராமரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமை அன்று சமையலறையை அடுப்பை சுத்தம் செய்து நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் எச்சில் பாத்திரங்கள் கழுவாமல் இருக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி சுத்தமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பச்சரிசி மாவை எடுத்து அடுப்பிற்கு பக்கத்தில் “அக்சயா” என்று எழுத வேண்டும்.

பிறகு அதற்கு ஊதுபத்தி காட்டி அங்கேயே அதற்கு பக்கத்திலேயே வைத்து விட வேண்டும் இப்படி ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பொழுது அன்னலட்சுமியின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். தினமும் செய்ய இயலாது என்பவர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிமுறையை பின்பற்றலாம். வேலைக்கு செல்கிறோம் எங்களால் எதையும் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தவறாமல் இந்த வழிமுறையை பின்பற்றும் பொழுது அன்னலட்சுமி மட்டுமல்லாமல் அனைத்து லட்சுமிகளின் அருளையும் பெற முடியும்.

நாம் அன்றாடம் செய்யக்கூடிய செயலாக இருந்தாலும் அதை எந்த நேரத்தில் செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் சமையல் அறையில் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்ய நம்முடைய வாழ்க்கையில் அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like