1. Home
  2. தமிழ்நாடு

ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவ் அர்ஜூனா ட்வீட்..!

1

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். இதற்குக் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!

‘அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்தக் கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்தத் தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன் என்று அறிக்கை ஒன்றை ஆதவ் அர்ஜூனா நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இன்று ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! என்று ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டால், அரசியல் உங்கள் வாழ்க்கையில் ஈடுபடும் என்ற வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like