திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆதவ் அர்ஜுனா!

தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
விசிகவிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, இன்று தவெகவில் இணைந்தார். மேலும் அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. மேலும் அவர், திருமாவளவனுக்கு 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலை பரிசாக வழங்கினார்.