திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததால் தான் புத்தக விழாவில் கலந்துகொள்ளவில்லை - ஆதவ் அர்ஜுனா..!
அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் உடன் திருமாவளவன் பங்கேற்காதது தொடர்பாக அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.அதாவது திருமாவளவனுக்கு திமுகவே அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் அந்த புத்தக விழாவில் கலந்து கொண்ட நிலையில், இதன் காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக்கூடாது என்று திமுக அழுத்தம் கொடுத்தாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் கூட்டணி உருவாகும் என்று நினைப்பது முதிர்ச்சியற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.
இதற்காக அமைச்சர் எ.வ. வேலு தான் திருமாவளவனிடம் பேசியதாகவும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பதை முதல்வர் விரும்பவில்லை என்று எ. வ. வேலு அப்போது தெரிவித்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கே எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.