1. Home
  2. தமிழ்நாடு

ஆதார் அட்டை இனி (PVC) ப்ளாஸ்டிக்கில்...

ஆதார் அட்டை இனி (PVC) ப்ளாஸ்டிக்கில்...


ஆதார் என்பது 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் கொண்ட ஒரு அடையா அட்டை ஆகும். இதனை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் வழங்குகிறது. இந்தியாவில் அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது.

அரசாங்க திட்டங்கள், குழந்தையை அனுமதிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டை ஒன்றாகும். இது அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக, வழங்கப்பட்டு வந்த ஆதார் அட்டை மிகவும் பருமனாகவும், அளவில் பெரிதாகவும் இருந்தது. அதை எடுத்துச் செல்வது கடினம். ஆனால் இப்போது, பாலிவினைல் குளோரைடு என்ற பி.வி.சி பிளாஸ்டிக் அட்டையில் ஆதார் மறுபதிப்பு செய்ய அனுமதித்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஆதார் அட்டை ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு போன்ற சைஷில் எளிதாக எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும். இதனை ஆதார் நிறுவனம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.


அதில், நீங்கள் இப்போது அனைத்து புதிய ஆதார் பி.வி.சி கார்டையும் ஆர்டர் செய்யலாம், இது நீடித்தது, கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, மேலும் நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது எனவும் ட்விட்டரில் கூறப்பட்டுள்ளது.

பி.வி.சி அட்டை என்பது ஒரு பிளாஸ்டிக் அட்டை, அதில் ஆதார் தகவல் அச்சிடப்படுகிறது. இந்த அட்டையை உருவாக்க ₹ 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like