1. Home
  2. தமிழ்நாடு

இனி திருப்பதி கோவிலில் பிரசாத லட்டு வாங்க ஆதார் கட்டாயம் : தேவஸ்தானம் அறிவிப்பு..!

1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக் கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம், ரூ. 300 டிக்கெட், சர்வ தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

இது தவிர கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ரூ. 50 கட்டணம் செலுத்தி லட்டுக்களை பெற்று வந்தனர். இருப்பினும் லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் ஒரு பக்தருக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் லட்டு பிரசாதத்தை சிலர் அடுத்தடுத்த கவுண்டர்களில் திரும்பத் திரும்ப பெற்று புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இதனால் இனி ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் ரூ. 50 என இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு இலவச லட்டு மற்றும் கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கட்டுப்பாடு விதித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like