இறந்தும் வாழும் இளைஞர்..!மூளைச்சாவு அடைந்த இலங்கை தமிழரின் உடல் பாகங்கள் தானம்!
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த விஜயகுமார்- புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரேம்குமார் (19). 12ம் வகுப்புப் படித்துள்ளார். மேல் படிப்பு படிக்க முடியாமல் பெயிண்டர் ஆகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு சென்றவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே தவறி விழுந்ததில் தலையில் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யப் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
தனது மகன் இறந்தாலும் அவனது உறுப்புகள்மூலம் ஐந்து பேர் உயிருடன் வாழ்வது மிகச் சிறந்தது. இதேபோல் மற்றவர்களும் உடல் தானம் செய்ய வேண்டும் எனப் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டார்.
இதன் அடிப்படையில் பிரேம் குமாரின் கிட்னி அரசு மருத்துவமனைக்கு ஒன்றும், தனியார் மருத்துவமனைக்கு ஒன்றும் அனுப்பப்பட்டது. சென்னை மற்றும் ஹைதராபத்திற்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் 5 பேர் பயனடைய உள்ளனர். இது போன்ற சம்பவம் புதுச்சேரி மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்று இருப்பதாகத் தகவல்.