1. Home
  2. தமிழ்நாடு

இளம்பெண்ணிற்கு வலிப்பு..! பரப்புரையை நிறுத்தி முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர்..!

Q

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தென் சென்னை வேட்பாளராக போட்டியிட ஜெயவரதனுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சீட் கொடுத்துள்ளார். இவர் கடந்த 2014-19 வரை தென் சென்னை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவரதன் கடந்த 10 நாட்களாக தென் சென்னை முழுவதும் தேர்தல் பரப்புரைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் தென் சென்னை சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மீதான செயல்பாடுகளில் தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இதனால் அதிமுக வேட்பாளர் ஜெயவரதன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் மீது தொகுதி மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிலையில், கால் மேல் கால் போட்டு தனது நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்து தமிழச்சி தங்க பாண்டியனுக்கு இவ்வளவு ஆணவமும், திமிரும் இருக்கக் கூடாது என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்து, முன்னாள் எம்.பி-யும், அதிமுக வேட்பாளருமான ஜெயவரதன் அவரது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,
”ஓட்டு கேட்கும் போது மக்களை மதிக்க தெரியாத தென்சென்னை திமுக வேட்பாளர். குடிநீர்,வேலைவாய்ப்பு,அடிப்படை வசதிகள்,புயல்,வெள்ளம் என மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தேர்தல் வந்தவுடன் கால் மேல் கால் போட்டு மக்களை அணுகுவது உங்கள் மனதின் வக்கிர எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதிகாரம் என்பது நிரந்தரமில்லாதது. ஆனால் அதை அளித்தவர்களுக்கு உங்களால் மரியாதையை கூட திருப்பி அளிக்க முடியவில்லை. தென்சென்னையின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காத உங்களுக்கு தக்க பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என ஜெயவரதன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் மக்களவை தேர்தல் பரப்புரையில் ஜெயவரதன் ஈடுபட்டிருந்த போது ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் துடித்துக் கொண்டிருந்தார். அதனை கண்டவுடன் மருத்துவரான ஜெயவரதன் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு, மேல் சிகிச்சைக்காக இளம்பெண்ணை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்து, தானும் நேரில் சென்று இளம்பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஜெயவரதனின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like