1. Home
  2. தமிழ்நாடு

4% வரைக்கும் வழங்கும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம்..!

1

சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்திய அஞ்சலகம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தபால் அஞ்சலக சேமிப்பு திட்டம் பயனர்களுக்கு நான்கு சதவீதம் வரைக்கும் வருடாந்திர வட்டி வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் ரூபாய் 500 சேமிப்பு செய்து விருப்பத்திற்கு ஏற்ப டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும், குறைந்தது அக்கவுண்டில் ரூ. 500 வரையிலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை மினிமம் பேலன்ஸ் வைத்துக்கொள்ள தவறினால் ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தபால் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து பயன்பெற முடியும். மேலும், இந்த தபால் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு தபால் நிலையத்திற்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம்.. அனைத்து வயது பிரிவினருக்குமே தகுதி உள்ளது.. வருமான வரி சட்டம் பிரிவு 80TTA இன் கீழ் 10,000 ரூபாய் வரை வட்டி தொகை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சான்றிதழை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ பாஸ்புக் வழங்குவதற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்... அதேபோல, கணக்கு பரிமாற்றம் மற்றும் கணக்கு உறுதிமொழி கட்டணம் ஒவ்வொன்றும் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். காசோலையை தவறாக பயன்படுத்தினால் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். டூப்ளிகேட் செக் புக் பெற வேண்டுமானால், ரூ.50 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் கணக்கினை தபால் நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்..வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் செய்யப்பட்ட நிலையில், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த திட்டத்தில் காசோலை, ஏடிஎம் கார்டு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆதார் இணைப்பு, அடல் பென்சன் திட்டம், சுரக்‌ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற வசதிகளும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like