1. Home
  2. தமிழ்நாடு

ஒரு லாரி முழுக்க மதுபாட்டில்கள்..! நன்றி தெரிவிக்கும் விழாவில் மதுபாட்டில்களை விநியோகித்த பாஜக எம்.பி.!

1

சிக்கபள்ளாப்பூர் தொகுதி பாஜக எம்பி கே சுதாகர் லோக்சபாவில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் விருந்து அளித்தார். கட்சி அமைப்பாளர்கள் இந்த விருந்தில் பகிரங்கமாக மதுபானம் பரிமாறி விநியோகித்ததாக கூறப்படுகிறது.லாரிகளில் கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்களை மக்கள் நீண்ட வரிசையில் நின்று எடுத்துச் சென்றனர். போலீசார் முன்னிலையில் மதுபானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு லாரி முழுக்க மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டதாக தகவல்

சிக்கபள்ளாப்பூர் எம்பி கே.சுதாகர், காவல் துறைக்கு பாதுகாப்பு பணி வழங்கக் கோரி கடிதம் எழுதியதோடு, விருந்தில் மது வழங்கப்படும் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மதியம் 12.30 மணி முதல், மேடை நிகழ்ச்சி தொடங்கும், உணவு மற்றும் மது ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று பாஜக தலைவர் காவல் துறைக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இருப்பினும், பெங்களூரு ஊரகக் காவல் கண்காணிப்பாளர் சி.கே.பாபா, நிகழ்ச்சியில் மது வழங்கக் கூடாது என்று ஏற்பாட்டாளர்களிடம் கூறியதுடன், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். “காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மது வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது. நிபந்தனைகளை மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், மதுபானம் வழங்க கலால் துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர்,” என்றார். .

லோக்சபா தேர்தலில் சிக்கபள்ளாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.எஸ்.ரக்ஷா ராமையாவை 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சுதாகர்.லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த சிக்கபள்ளாபூர் தொகுதியில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின.


 

Trending News

Latest News

You May Like