1. Home
  2. தமிழ்நாடு

அதிகாலை நடந்த கோர விபத்து..! பேருந்து – டெம்போ மோதி 10 பேர் உயிரிழப்பு!

1

உ.பி புலந்தசாகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 25 பேர் டெம்போவில் சென்றுக்கொண்டிந்தனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த பேருந்து முன்னாள் சென்ற டெம்போவை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக டெம்போ மீது பயங்கரமாக மோதியது.

இதில் மெம்போ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 10 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like