1. Home
  2. தமிழ்நாடு

கோர விபத்து..! 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி 40 பேர் பலி..!

Q

ஆப்பிரிக்கா கிளிமஞ்சாரோ மாகாணம் மோஷி நகரில் இருந்து தங்கொ நகருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50க்கும் மேற்பட்டோர் கடந்த சனிக்கிழமை இரவு சொகுசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தனர். 
நெடுஞ்சாலையில் சபசபா என்ற பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே மற்றொரு பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதிமாக அந்த பஸ்சின் டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த சொகுசு பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 பஸ்களும் தீப்பற்றி எரிந்தன.
இதில் 2 பஸ்களுக்குள் இருந்தவர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பஸ்சில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். மேலும், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இரு பஸ்களில் இருந்து மொத்தம் 30 பேரை காயங்களுடன் மீட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

Trending News

Latest News

You May Like