1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்பு..!

1

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் ஆகஸ்ட் 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் துவங்க உள்ளது. மாரத்தானில் கலந்துகொள்ளும் மக்களுக்கு அன்று அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர். இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 1,063 திருநங்கைகள், திருநம்பிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாரத்தான் போட்டிக்கான பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவுத்திடலில் வழங்க உள்ளார். அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் வழங்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடந்துள்ளது. சிறுவனின் தந்தை ஆக்சிஜன் முகக்கவசம் வர தாமதமாகும் என்ற காரணத்தால் தாமகவே முன்வந்து பிளாஸ்டிக் கப்பை வாங்கி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்றுவருகிறது.” என்றார்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் 06.08.2023 அன்று காலை 03.00  மணி முதல்  11.00 மணி  வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

*ராஜாஜி சாலை இருந்து வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் பாரீஸ் கார்னர், NFS சாலை, முத்துச்சாமி பாலம், வாலாஜா பாயிண்டிலிருந்து வலது புறம் திரும்பி அண்ணாசாலையில் வெல்லிங்டன் பாயின்ட் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

*வாலாஜா பாயிண்டில் இருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை உள்ள வலதுபுற சாலை இருவழி பாதையாக செயல்படும்.

*வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பெரியார் சிலை மற்றும் பாட்டா சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

*வாகனங்கள் பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் லாய்ட்ஸ் சாலையிலிருந்து காமராஜர் சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அவ்வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு மற்றும் ரத்னா கஃபேயிலிருந்து திருப்பி விடப்பட்டு டாக்டா நடேசன் சாலை செல்ல அனுமதிக்கப்படும்.

*சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை x காரணீஸ்வரர் பக்கோடா தெரு சந்திப்பில் திருப்பப்பட்டு காரணீஸ்வரர் பக்கோடா தெரு வழியாக டாக்டர்.நடேசன் சாலை, டாக்டர்.ராதாகிருஷணன் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

1

*மியுசிக் அகாடமியிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு வி.எம்.சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ராமகிருஷ்ண மடம் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

*அண்ணாசாலையில் வரும் கனரக வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணாசிலை செல்ல அனுமதி இல்லை. ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து பின்னி சாலை மற்றும் மார்ஷல் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like