1. Home
  2. தமிழ்நாடு

மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள்; தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை..!

Q

எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் (SBI Junior Associate) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இன்று (டிசம்பர் 17) முதல் ஆன்லைன் வழியாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

SBI Clerk 2024 பணியின் விவரங்கள்

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் இயங்கும் கிளைகளில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் (SBI Junior Associate) பதவி நிரப்பப்படுகிறது.

தேசிய அளவில் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இப்பதவிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 336 காலிப்பணியிடங்களும், புதுச்சேரியில் 4 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

இப்பணியிடங்களில் எஸ்சி - 63, எஸ்டி - 2, ஒபிசி - 91, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 33, பொதுப் பிரிவினருக்கு - 150 என்ற வகையில் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு

எஸ்பிஐ வங்கி கிளார்க் பிரிவு பணிக்கு 01.04.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 20 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது. அதே போன்று அதிகபடியாக 28 வயதிற்கு அதிகமாக இருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் 02.04.1996 தேதிக்கு முன்பும் 01.04.2004 தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது.

இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

31.12.2024 தேதியின்படி தரவுகள்படி, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும். இரண்டு பட்டப்படிப்புகள் (IDD) இணைத்து பட்டப்பெற்றவர்கள் 31.12.2024 தேதி அல்லது அதற்குள் கல்வியை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டில் இருக்கும் மாணவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பட்டப்படிப்பு முடிவு தேதி டிசம்பர் 31 ஆக இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு ஆன்லைன் வழியாக 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு ஆன்லைன் வழியில் 200 மதிப்பெண்அளுக்கு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வு நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்பில் தமிழ் மொழியில் படித்தவர்கள் இத்தேர்வு கிடையாது. மதிப்பெண் சான்றிதழை சபர்பிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

எஸ்பிஐ கிளார்க் பிரிவில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 என்ற விதம் சம்பளம் வழங்கப்படும். இதில் தொடக்கமே அடிப்படை சம்பளமாக ரூ.26,730 வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள (- Recruitment of Junior Associates 2024) ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை தகுந்த தகவல்களுடன் நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி. மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

எஸ்பிஐ வங்கியில் கிளார்க் பிரிவின் இருக்கும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இன்று முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தொடங்கலாம். பட்டப்படிப்பு மற்றும் தமிழ் அவசியம் என்பதால் இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு வங்கி பணியில் சேரலாம்.

Trending News

Latest News

You May Like