1. Home
  2. தமிழ்நாடு

மணிப்பூருக்கு 'இன்டியா' கூட்டணியின் எம்.பி.கள் குழு சென்றிருப்பது எல்லாம் நடிப்பு..!

1

கொல்கத்தா விமான நிலையம் வந்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இன்டியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் சென்றிருப்பது ஒரு நாடகத்தனமான செயல். எதிர்க்கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகள், அவர்கள் ஆட்சியில் மணிப்பூர் பற்றி எரிந்தது குறித்து எதுவும் பேசுவதில்லை. இன்டியா எம்பிகள் மணிப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவர்களை அப்படியே மேற்கு வங்கத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் கொடுமைகளுடன் உடன்படுகிறாரா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கொலைகளும் நடக்கின்றன எதிர்க்கட்சிகள் அங்கு ஏன் செல்லவில்லை. இன்டியா எம்பிக்கள் குழு ராஜஸ்தானுக்கும் செல்லுமா?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like