திடீர் ட்விஸ்ட்..! வழக்கு வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்..!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு செல்ல உள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து புகாரை வாபஸ் பெற்றார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி சீமான் மீது புகாரை வாபஸ் பெற வந்தேன். யாரும் அச்சுறுத்தல் பேரிலோ அல்லது தூண்டலின் பேரிலோ இந்த வழக்கை தான் வாபஸ் பெறவில்லை எனவும் தன்னுடைய சொந்த கருத்து ரீதியில் வேறு வழி இன்றி வாபஸ் பெற்றதாகவும், அருகில் இருந்த சீமானையே காவல்துறை ஒன்றும் செய்ய முடியாததாலும், கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்றும் மனவேதனையுடனும் தெரிவித்தார்.
மேலும், தான் தங்கும் இடத்தில் தன்னால் இருக்க முடியவில்லை எனவும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் செல்போனும் பயன்படுத்த முடியவில்லை எனவும் மேலும் தற்போது இந்த வழக்கை வாபஸ் பெற்று தான் பெங்களூருக்கு செல்ல உள்ளதாகவும் நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.இது பாலியல் வன்கொடுமை வழக்கு என்பதால், சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசனை செய்த பிறகே, வழக்கு வாபஸ் பெறுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.