1. Home
  2. தமிழ்நாடு

ஒரு சங்கத்தினர் ஸ்டிரைக்... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் ஓடுமா ?

1

பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று (அக்.24) மாலை 06.00 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. தொடர் விடுமுறை இன்றுடன் முடியவுள்ள நிலையில், இன்று (அக்.24) மாலை முதல் லட்சக்கணக்கான பயணிகள் சென்னைக்கு திரும்பவுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் மாறன், “ஆம்னி பேருந்துகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம், எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன; அவை அனைத்தும் இயங்கும். ஆண்டுக்கு 315 நாட்கள் மிகக்குறைந்த பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவித்துள்ள நிலையில், மற்றொரு சங்கத்தினர் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவித்துள்ளதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like