நாடக காதலால் ஒரு அழகான குடும்பம் சீரழிந்த கதை..!
ஒரு அழகான குடும்பம். அந்த அழகான அப்பா அம்மாவிற்கு ஒரே ஒரு பெண்.அவளும் பி.இ முடித்துவிட்டு எம்.இ படித்து கொண்டிருந்தாள். தினமும் அரசு பேருந்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம் .
கல்லூரி வாசலில் உள்ள பேருந்து நிலையத்தில் தினமும் வந்து நின்று தினமும் இந்த பெண்ணை பார்க்க துவங்கினான் மார்டன் இளைஞன் ஒருவன். விதவிதமான பைக்கில் வந்து மாதக்கணக்கில் பின்தொடர்ந்து ஒரு வழியாக அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியும் விட்டான்.
தான் ஒரு பொறியியல் பட்டதாரி எனவும் தனியார் கம்பெனியில் பணிபுரிவதாகவும் பெரிய குடும்பம் எனவும் கூறி சில மாமாதங்கள் காதல் தொடர்ந்தது..அவ்வப்போது வெளியே சுற்றுவதும் பைக்கில் ஒன்றாக செல்வதுமாக காதல் தொடர்ந்தது. இப்படி இருக்க ஒரு நாள் ஒரு ஒரு நபர் வழியாக அந்த பெண்ணிற்கு தன் காதலனை பற்றிய உண்மை தெரிந்தது .
தன் காதலன் பட்டதாரியே அல்ல பத்தாம் வகுப்பே படித்தவன் என்றும் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது கூலி வேலைக்கு மட்டும் செல்வதும் இதே போல் நிறைய பெண்களை காதலித்து ஏமாற்றியதும் தெரிந்தது. உடனே அவன் உடனாக தொடர்பையும் காதலையும் முறித்து கொண்டாள்..
சில மாதங்களிலேயே எம்இ படிப்பை முடித்து அந்த பெண் ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலைக்கும் சேர்ந்து விட்டாள். அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தனர்..கல்லூரி பேராசிரியர் வேலையில் இருந்த ஒரு வரனை பேசி முடித்து திருமண தேதி குறித்து ஏற்பாடுகள் நடைபெற்றுகொண்டிருந்தது..தன் பழைய காதல் பற்றியோ காதலன் பற்றியோ இவள் யாரிடமும் தெரிவிக்கவில்லை.
திருமணத்திற்கு பத்து நாள் இருந்த நிலையில் முன்னாள் காதலன் இவள் திருமண செய்தியை எப்படியோ கேள்விபட்டு இவளுக்கு போண் செய்து நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள் ஆனால் எனக்கு ஒரு தொகையை கொடுத்து விடு இல்லை எனில் நாம் ஒன்றாக எடுத்த புகைபடங்களை வெளியிட்டு உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்ட வேறு வழி தெரியாமல் பயந்த பெண் தந்தையிடமோ வருங்கால கணவர் இடமோ இதை சொல்லாமல் தன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை அனுப்புகிறாள்
அவனோ அந்த பணம் போதாது உன் திருமணத்திற்காக வாங்கிய நகைகளில் கொஞ்சம் கொடு என காதலன் மிரட்ட வேறு வழியின்றி தோழிகளுக்கு பத்திரிக்கை கொடுக்க செல்வதாய் சொல்லி விட்டு காதலனை பார்க்க நகைகள் உடன் செல்கிறாள் இந்த பெண்.
சென்ற பிறகு காதலன் இவள் செல்போணை பிடிங்கி கொண்டு மிரட்ட தொடங்கி இருகிறான் என்னை திருமணம் செய்து கொள் இல்லை என்றால் செத்துவிடுவேன் உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று பலவாறு மிரட்டி மூளைசலவை செய்து அதே நாளில் திருமணமும் செய்து கொண்டான். ஊரார் கண்களுக்கு அந்த பெண் திருமணத்திற்கு பத்து நாள்கள் இருந்த நிலையில் ஓடி போய் காதலனை திருமணம் செய்தது போலவே தோன்றியது.
தன் செல்ல மகள் இப்படி செய்ததில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய் தந்தையரை அந்த பெண்ணிற்கு நிச்சயத்த மணமகனின் குடும்பமும் ஆத்திரத்தில் திட்டி தள்ள அவர் திரைபடங்களில் வருவது போல் மகளை வெட்டி சாய்க்கவில்லை அவளை சபிக்கவில்லை
மிகுந்த மனவலியோடு அதிர்ச்சியோடு யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு எங்கோ சென்று விட்டார்கள் அந்த பெண்ணின் பெற்றோர்கள்.
தாய் தந்தை ஆதரவு இல்லாமல் விவாகரத்து வாங்கி கொண்டு தனியே வாழ தைரியமில்லாமல் வேலைக்கு சென்று அந்த பணத்தை பெரும்பகுதி கணவன் எடுத்து கொள்ள நரக வேதனையுடன் வாழ்க்கை நடத்துகிறாள் அந்த பெண்.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அந்த இளைஞன் இத்தனை திட்டம் போட்டு அந்த பெண்ணை திருமணம் செய்ய காரணமாக இருந்தவர்கள் இரண்டு வக்கில்கள். இந்த இளைஞனே ஒதுங்கி கொள்ள நினைக்கையில் அவன் தோழன் வழியாக அறிமுகமான வக்கீல் கொடுத்த திட்டபடியே அனைத்தும் நடைப்பெற்றது அவர்களுக்கு வக்கீல் பீஸ் ஆக அந்த பெண்ணின் தங்க நகையே கொடுக்கப்பட்டது.