1. Home
  2. தமிழ்நாடு

அயோத்தி ராமரின் கண்கொள்ளா காட்சி..!

1

அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் முறையாக ராம நவமி கொண்டாடப்படும் நிகழ்வை சிறப்பாக மாற்றும் வகையில் சூரிய திலகம் நிகழ்வு நடைபெறுகிறது அறிவியலுடன், கட்டட அமைப்பை ஒருங்கிணைந்து, சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் இந்த ஒளி நான்கு நிமிடங்கள் (12.16 -12.21) விழுந்தது.இந்த அற்புத நிகழ்வை பக்தர்களும் கண்டு களித்தனர். மேலும் அயோத்தி ராம நவமி விழாவைக் காண சுமார் 100 எல்.ஈ.டிகள் நிறுவப்பட்டுள்ளன. அயோத்தி நகரின் பலவேறு பகுதிகளிலும் இந்த எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளதால் அதிகாலை முதலே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இரவு வரையும் தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராம நவமி விழாவின் ஒரு பகுதியாக ராம் லல்லாவுக்கு '56 போக பிரசாத்' பிரசாதம் வழங்கப்படுகிறது. கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் ஜொளிக்கிறது.

ஜென்மபூமி பாதையை சிவப்பு கம்பளமும் அலங்கரிக்கும் வகையில் ஜொளிக்கிறது. இதனால் பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் வெயிலில் வெறும் காலுடன் காத்திருக்கும் பக்தர்களுக்கு பாதங்கள் சுடாமல் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ராம நவமியை முன்னிட்டு குழந்தை ராமருக்கு மஞ்சள் மற்றும் பிங்க் நிறத்தில் ஆன கண்கவர் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விலை உயர்ந்த ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like