கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை சாலையில் தூக்கி வீசிய தனியார் மருத்துவமனை ?

கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை சாலையில் தூக்கி வீசிய தனியார் மருத்துவமனை ?

கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை சாலையில் தூக்கி வீசிய தனியார் மருத்துவமனை ?
X

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ளது தனியார் மருத்துவமனை (எஸ்ஆர்எம்). இந்த மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் பிரேதம் ஒன்றை மருத்துவமனை ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இறந்தவர் கொரோனா தொற்றால் இறந்தவரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் உயிரிழந்தவர் உடல் கையாளப்பட்ட முறை குறித்து தனியார் மருத்துவமனையில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக திருச்சி ஆட்சியர் விளக்கமளித்துள்ளர். கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதாக ஆட்சியர் சிவராசு தகவல் அளித்துள்ளார்.

உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் சமயபுரம் இருங்கலூர் கிராம மயானத்தில் உடல் புதைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விசாரணை நடத்தி வருகிறார். இதே போல புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த சடலத்தை சுகாதாரத் துறையினர் தூக்கி வீசிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Newstm.in

Next Story
Share it