1. Home
  2. தமிழ்நாடு

"நான் ரெடி தான் வரவா" பாடலின் நடனக்கலைஞர்கள் லியோ படக்குழுவினர் மீது போலீசில் புகார்..!

1

லியோ படத்தில் இடம்பெற்ற பாடலான நான் ரெடிதான் வரவா.. என்ற பாடல் யூ-டியூபில் 15 கோடி பார்வையாளர்களை எட்டி வருகிறது. நடிகர் விஜய் பாடி, நடனமாடிய இந்த பாடலில் 1200-க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் நடனமாடியதாக கூறப்படுகிறது. அவ்வாறு கடந்த ஜூன் மாதம் பாடல் படமாக்கப்பட்டபோது, நடனக்கலைஞர்கள் 1200 பேரில் சிலருக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என புகார் அளித்துள்ளனர் நடனக்கலைஞர்கள். 

ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக நடனக் கலைஞர்கள் சிலர் பொங்கி எழுந்துள்ளனர். 

இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தில் முறையிட்டபோது, படத்தின் நடன அமைப்பாளர் மாஸ்டர் தினேஷிடமே கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மாஸ்டரை தேடி சென்றால் இதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என கூறி அலைக்கழித்துள்ளார் தினேஷ். 

ஒருகட்டத்தில் கடும் விரக்தியடைந்த நடனக் கலைஞர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று லியோ படக்குழுவினர் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால் சைதாப்பேட்டை காவலர்கள், தியாகராய நகர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அவர்களும் தங்கள் பங்குக்கு அலைக்கழித்துள்ளனர்.  

இதையடுத்து சென்னை காவல் நிலையத்துக்கு சென்று படத்தயாரிப்பு நிறுவனம் மீது புகார் அளித்தனர். ஆனால் அங்கேயும் புகாரை எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மாம்பலம் காவல் நிலையத்துக்கு அனுப்பினர். இவ்வாறு ஒவ்வொருவராலும் அலைக்கழிப்புக்கு உள்ளான நடனக்கலைஞர்கள் தங்களுக்கு சம்பளம் வருமா வராதா?  என ஏக்கத்தில் உள்ளனர். 

ஒரே பாடலில் ஆயிரக்கணக்கானோரை நடனமாட வைப்பது அவசியம் இல்லைதான் என்றாலும், அந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பமும் நிச்சயம் தியேட்டருக்கு படம் பார்க்கும். அதனால் பெருத்த லாபம் கிடைக்கும் என்பதே இன்றைய திரைக்கலைஞர்களின் குறி.. லாபத்தை மட்டுமே எதிர்பார்க்கும் தயாரிப்பு நிறுவனம் இப்படியா அலட்சியமாக இருப்பது? ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு.. என பாடல் மூலம் வியாக்ஞானம் பேசிய நடிகர் விஜய், இவ்வாறான புகார்களால் பெயரை இழந்து போகாமல் இருந்தால் சரி..

Trending News

Latest News

You May Like