இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி! ஒரு கிராம் 8000 கீழ் குறைந்தது..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று சவரன் ரூ.63,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.7,990-க்கு விற்பனை.
இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தங்கம் விலையானது இன்று (மார்ச் 7) குறைந்து காணப்படுகிறது. றது.
இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 7990 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையானது சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்களை ஆறுதல் அடையவைத்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520