பிறந்து 12 நாளே ஆன குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்!
பிறந்து 12 நாளே ஆன குழந்தையை, வீட்டில் வளர்த்த நாயே கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் தான் இந்த கோர நிகழ்வு நடந்துள்ளது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்தால் அவர்கள் விளையாட ஏதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் மிக கொடூரமாக உள்ளது.
வீட்டில் இருந்த குழந்தையை நாய் கடித்து பலத்த காயம் ஏற்பட்டவுடன் குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
தற்போது குற்றவாளி நாய் அல்ல. குழந்தையின் பெற்றோர் தான். அவர்கள் தான் குழந்தையை பாதுகாத்திருக்க வேண்டும். குழந்தையை பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பெற்றோர் ஸ்டீபன் ஜாய்ன்ஸ், அபிகெய்ஸ் எல்லிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையை கடித்து கொலை செய்த நாயை காவல்துறையினர் பிடித்துச்சென்றுள்ளனர். ஆனால், நாயை மூன்று காவலர்கள் சேர்ந்து இழுத்தும் இழுக்க முடியவில்லை என தெரிவித்தனர்.
newstm.in