ஐந்து வகை இனிப்புகள் அடங்கிய தொகுப்பு ரூ.450- க்கு விற்பனை..!
ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, காஜூ கட்லி (250 கிராம்) 260 ரூபாய்க்கும், நட்ஸ் அல்வா (250 கிராம்) 190 ரூபாய்க்கும், மோத்தி பாக் (250 கிராம்) 180 ரூபாய்க்கும், காஜூ பிஸ்தா ரோல் (250 கிராம்) 320 ரூபாய்க்கும், நெய் பாதுஷா (250 கிராம்) 190 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வகை இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (500 கிராம்) ரூபாய் 450- க்கு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், ஜாமூன், பால்கோவா, மிக்ஸர், நெய் முறுக்கு போன்றவரையும் விற்பனைச் செய்யப்படும் என்று அறிவித்துள்ள ஆவின் நிறுவனம், அதன் விலை பட்டியலையும், ஆர்டர் செய்வதற்கான தொலைபேசி எண்களையும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை உங்கள் ஆவினோடு கொண்டாடுங்கள். #TNDIPR #AavinProducts #AavinTn pic.twitter.com/hRNTfBg2pn
— Aavin TN (@AavinTN) October 5, 2023