ஆசையோடு லண்டன் புறப்பட்ட புதுமணப் பெண்..விமான விபத்தில் உயிரிழந்த சோகம்..!

போயிங் 787 ட்ரீம் லைனர் வகையிலான இந்த விமானம் அகமதாபாத்தில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.எங்கேயும் நிற்காமல் நேரடியாக லண்டனை சென்றடைவதாக தான் இருந்தது. பத்து மணி நேர பயணமாக இது இருந்திருக்க வேண்டும். நம்பிக்கைகளோடும் கனவுகளோடும் தொடங்கப்பட்ட இந்த பயணம் பலரின் வாழ்க்கைக்கும் முடிவுரை எழுதுவதாக மாறி இருக்கிறது.
எங்கேயும் நிற்காமல் நேரடியாக லண்டனை சென்றடைவதாக தான் இருந்தது. பத்து மணி நேர பயணமாக இது இருந்திருக்க வேண்டும். நம்பிக்கைகளோடும் கனவுகளோடும் தொடங்கப்பட்ட இந்த பயணம் பலரின் வாழ்க்கைக்கும் முடிவுரை எழுதுவதாக மாறி இருக்கிறது.
தன்னுடைய கணவரை சந்திப்பதற்காக பல்வேறு ஆசைகளுடனும் கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை இந்த விமான விபத்தின் மூலம் முடிவடைந்து இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் பலோதரா மாவட்டத்தை சேர்ந்த அரபா என்ற கிராமத்தை சேர்ந்த பெண் தான் குஷ்பூ ராஜ் புரோஹித். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் மன்ஃபூல் சிங் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. மன்ஃபூல் சிங் லண்டனில் இருக்கும் ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படித்து வருகிறார். திருமணம் முடிந்த கையோடு அவர் லண்டனுக்கு படிப்புக்காக சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரை சந்திப்பதற்காக குஷ்பூ ராஜ் புரோஹித் ஏர் இந்தியா விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவருடைய ஆசை, கனவு அனைத்துமே இந்த விபத்தோடு சேர்ந்து நொறுங்கி விட்டது. இந்த விமான விபத்தில் மட்டும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் குஷ்பூ ராஜ் புரோஹித்தும் ஒருவர். இந்த விமான விபத்தில் உயிரிழந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்ற இரண்டு பேர் லண்டனில் சமையல் கலைஞராக பணி புரிவதற்காக சென்று இருக்கிறார்கள். அதேபோல ஒரு தந்தையும் மகளும் வர்த்தக நோக்கத்திற்காக இந்த விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.