1. Home
  2. தமிழ்நாடு

வந்தாச்சு புது அப்டேட்..! இனி ஸ்கேன் செய்ய தனி ஆப் தேவையில்ல..!

1

பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது வாட்ஸ்அப். 

வாட்ஸ்அப்பில் டாக்குமெண்டுகளை அனுப்பவதற்கான ஆப்ஷனுடன் ஸ்கேனிங் அம்சமும் புதிதாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது ஆவணங்களை மற்றவர்களுடன் பகிர்வதை எளிதாக்குகிறது. வாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷன்களில் மட்டும் கிடைத்துவந்த இந்த அம்சங்கள் இப்போது பரவலாக ஐபோன் பயனர்களுக்குக் கிடைக்கின்றன.

WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, iOS வாட்ஸ்அப் செயலியின் 24.25.93 வெர்ஷனில் இந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது வாட்ஸ்அப் கேமரா மூலம் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி (AR) எஃபெக்டுகளை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் கேமரா வ்யூஃபைண்டரில் உள்ள கேலரி ஐகானுக்கு அடுத்ததாக AR ஐகான் தோன்றும். confetti, star windows, tears, underwater, sparkles, karaoke போன்ற AR எஃபெக்டுகளை பயன்படுத்தி படங்களை கிளிக் செய்யலாம்.வாட்ஸ்அப்பில் போட்டோ எடுக்கும்போது சுற்றியுள்ள பின்னணியை மறைத்து, புதிய பின்னணிகளைக் கொண்டுவர AR எஃபெக்டுகள் உதவும். மேலும், இது வீடியோவின் கலர் டோனை சரிசெய்யவும் அனுமதிக்கிறது.

இனி ஆவணங்களை ஸ்கேன் செய்ய தனியாக ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. வாட்ஸ்அப் அந்த வேலையைச் செய்யும். ஆவணங்களை நேரடியாக ஸ்கேன் செய்யும் அம்சம் இப்போது அறிமுகமாகியுள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் PDF டாக்குமெண்டுகளை எளிதில் உருவாக்கி பகிர முடியும். இதற்காக டாக்குமெண்ட் ஷேரிங் விண்டோவில் Scan document என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் டாக்குமெண்ட் ஸ்கேன் அம்சம் கலர், கிரேஸ்கேல் மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை போன்ற பில்டர்களை உள்ளடக்கியது. ஸ்கேன் செய்யவேண்டிய பக்கத்தை படம் எடுத்தால், வாட்ஸ்அப் தானாகவே அதை செதுக்கித் தந்துவிடும். ஸ்கேன் செய்யவேண்டிய பக்கம் கேமராவின் வ்யூஃபைண்டருக்குள் சரியாக அமைந்திருந்தால், தானாகவே படம்பிடிக்கும் ஆட்டோ-ஷட்டர் ஆப்ஷனையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

Trending News

Latest News

You May Like