1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசியலில் புது திருப்பம்..! ரெடியாகிறதா தவெக - தேமுதிக கூட்டணி..?

1

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன.திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக பிரம்மாண்ட கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இதனால் அதிமுகவை நம்பியிருந்த தேமுதிகவை ராஜ்யசபா சீட்டை வைத்து கழட்டி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே 2021 தேர்தலின் போது தேமுதிகவை கழட்டி விட்ட எடப்பாடி பழனிசாமி தற்போது ஓராண்டு முன்பாகவே பேச்சு வார்த்தையே நடத்தாமல் கழட்டிவிட்டுள்ளார்.

அதிமுகவை நம்பி பாஜகவையும் பகைத்துக்கொண்டார் பிரேமலதா விஜயகாந்த். இதனால் அடுத்து என்ன செய்வது என தடுமாறிக் கொண்டிருக்கிறது தேமுதிக. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் அதிமுகவை நம்பியது. ஆனால் விஜய்யின் கண்டிஷன்களுக்கு கட்டுப்படாத அதிமுக, பாஜக பக்கம் பார்வையை திருப்பி கூட்டணியை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனால் தேமுதிக மற்றும் தவெகவின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தேமுதிகவும் தவெகவும் இணைந்து கூட்டணி அமைத்தால் இரண்டு கட்சிகளுக்குமே நல்ல பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 10 சதவீத வாக்குகளுடன் கெத்தாக இருந்த கட்சி தேமுதிக. தேமுதிகவுக்கு என ஜாதி ஓட்டுகள் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் ஓட்டு தமிழகம் முழுவதும் கிடைத்தது.

இதேபோல் தற்போது விஜய்க்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக் குறிதான். இந்த சூழலில் தவெகவும் தேமுதிகவும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் பலன் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஏற்கனவே கோட் படத்தில் விஜயகாந்த் ரெஃபரன்ஸை எடுத்துக்கொண்ட விஜய், 'இனிமே நீங்க பார்த்துக்குங்க' என்று சொல்லும்படியான வசனத்தை வைத்திருந்தார்.

இதனை விஜய்யின் அரசியல் வருகைக்கான விஜயகாந்தின் ஆசீர்வாதமாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். அதுமட்டுமின்றி விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொளிக்க, விஜயகாந்துடன் நடித்த செந்தூரப்பாண்டி படமும் ஒரு காரணம். செந்தூரப்பாண்டி படம்தான் விஜய்யின் சினிமா கெரியரை திருப்பிப்போட்ட படம்.


ஆகையால் விஜய்யின் அரசியல் வாழ்க்கையிலும் விஜயகாந்தின் தேமுதிக கைக்கொடுத்தால் சென்டிமென்ட்டாகவும் இருக்கும். அதேசமயம் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்த தெம்பும் தவெகவுக்கு கிடைக்கும். இது தேமுதிகவுக்கும் இழந்த வாக்கு வங்கியை மீட்க வாய்ப்பாக இருக்கும். தவெகவும் தேமுதிகவும் கூட்டணி வைத்தால் விஜய் ரசிகர்கள் நிச்சயம் எந்த சலனமும் இல்லாமல் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை..

ஆனால் இரு கட்சி தலைமைகளும் என்ன முடிவு எடுக்கும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.. 

Trending News

Latest News

You May Like