வந்தது புதிய நடைமுறை..! இனி இவர்களால் மின்கட்டணம் நேரடியாக செலுத்த முடியாது..!

மின் கட்டணம் கணக்கிடும் முறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர்.
தற்போது, வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது மின் கட்டணம் செலுத்தும் முறையிலும் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த மாதம் முதல் 4000 ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது என்றும், ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் ரூ.4000 அதிகமான மின் கட்டணத்தை நேரடி பணமாக செலுத்த முடியாது. ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து வரும் மாதங்களில் நேரடியாக செலுத்தும் தொகை படிப்படியாக குறைக்கப்படும். குறிப்பாக ரூ.1000 அல்லது அதற்கு மேலான மின் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.