1. Home
  2. தமிழ்நாடு

புது திட்டம் ஆரம்பம்.. விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்..!

1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்து வரும் விஜய், மக்கள் இயக்கம் மூலமாக சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.

இதன்மூலம் விஜய் அரசியலில் களமிறங்கவும் ஆயத்தமாகி வருகிறார். குறிப்பாக கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார். மேலும், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கான சத்துணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம், இலவச சட்ட ஆலோசனை மையம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக ‘தளபதி விஜய் நூலகம்’ நாளை தொடங்கப்படுகிறது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ’தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தொடங்கப்படுகிறது.

நாளை (நவம்பர் 18) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like