புதிய தோற்றம்..புதிய பயணம் - வெளியான உலகநாயகனின் புதிய தோற்றம்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து, கமல்ஹாசன் யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் கமல்ஹாசனை வைத்து அவரது 237- வது படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தனர். அப்படம் ஜனவரி மாதம் துவங்கும் என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், ’புதிய தோற்றம், புதிய பயணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், கமலின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New journey with a new look! #JourneyBegins#Ulaganayagan #KamalHaasan@ikamalhaasan pic.twitter.com/Oj2Ydypdt0
— Raaj Kamal Films International (@RKFI) October 14, 2024
New journey with a new look! #JourneyBegins#Ulaganayagan #KamalHaasan@ikamalhaasan pic.twitter.com/Oj2Ydypdt0
— Raaj Kamal Films International (@RKFI) October 14, 2024