1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் கொல்லம்-திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் அறிமுகம்..!

1

கொல்லம்-திருப்பதி இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து செவ்வாய், வெள்ளி மற்றும் கொல்லத்தில் இருந்து புதன், சனிக்கிழமை ரயில் இயக்கப்படும். செங்கனூர், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி, சித்தூர் வழியாக ரயில் திருப்பதி செல்லும்.

மேலும் பாலக்காடு-நெல்லை பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி -கரூர், சேலம் - கரூர் பயணிகள் ரயில், மயிலாடுதுறை -சேலம் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை - சேலம் இடையே விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like