தாலாட்டு சீரியல் நடிகரை தாக்கிய மர்ம கும்பல் .. பலத்த காயங்களுடன் சிகிச்சை..!

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நடிகர் மோகன் சர்மா. நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என தென்னிந்திய சினிமாத்துறையில் பணியாற்றிவருகிறார். சமீபத்திய சீரியலான சன் டிவியின் தாலாட்டு தொடரிலும் கதாநாயகியின் அப்பாவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த மோகன் சர்மாவின் காரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல் அவரை காரை விட்டு வெளியே தள்ளி பலத்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.இந்த தாக்குதலால் மோகன் ஷர்மாவின் இரண்டு கண்களுக்கு கீழும், கால் முட்டியிலும் காயங்கள் ஏற்பட்டது. 75 வயதான இந்த நடிகருக்கு ஏற்பட்ட இந்த மர்ம தாக்குதல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் காரணம் முன்விரோதம் என கூறப்படுகிறது. நடிகர் மோகன் சர்மாவிற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருக்கு சென்னை போயஸ் கார்டனில் இருந்தது. இந்த வீட்டை விற்பதாக தனியார் நிறுவனத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறார் நடிகர் மோகன் சர்மா. மேலும், இடைத்தரகர்களான சேகரன் மற்றும் கிருஷ்ணகுமார் மூலம், மருத்துவர் ராஜா ராமணனுக்கு அந்த வீட்டை வீற்றிருக்கிறார் நடிகர் மோகன் ஷர்மா.
வீட்டை விற்றபிறகும், இடைத்தரகர்கள் இரண்டு பெரும் அத்துமீறி வீட்டிற்குள் வந்துகொண்டிருந்தார்களாம். இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகர் மோகன் சர்மா. இந்த முன்விரோதம் காரணமாகத்தான் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் இது குறித்த விசாரணை செய்துவருகின்றனர்.