வானில் ஒரு அதிசயம்.. நீல வானில் தோன்றிய நீல நிலவு(Blue Moon) !

ப்ளூ மூன் (Blue Moon) என்பது ஒரு அரிதான விஷயமாகும். வானில் ஏற்படும் இந்த அரிய நிகழ்வான ‘ப்ளு மூன்’ நேற்று தோன்றியது. வானில் ஏற்படும் அரிய நிகழ்வான ப்ளூ மூன் எனப்படும் நிலவு முழு நிலவு மாதத்தில் ஒரு முறைதான் தோன்றும்.
2020 அக்டோபர் மாதத்தில் அறிய நிகழ்வான அக்டோபர் முதல் தேதி முழு நிலவு தோன்றியது. அதேபோல் கடைசி நாளான 31ஆம் தேதி தோன்றியது.
இதற்கு ப்ளூ மூன் என்று பெயர் இந்த நிலவு கடந்த 2018 தோன்றியது அதற்குபிறகு 2020 காணப்பட்டது. ப்ளூ மூன் மீண்டும் 2023 ல் தெரியும் என குறிப்பிடத்தக்கது
இந்த நாளில் காணப்படும் நிலவை (Moon) நீல நிலவு என நாம் அழைத்தாலும், உண்மையில் நிலவு நீலமாகக் காணப்படவில்லை.
இயற்கை பேரழிவுகளால் வளிமண்டலத்தில் வீசப்படும் துகள்கள் காரணமாக நிலவு மிகவும் அரிதாகவே நீல நிறமாகத் தெரிகிறது என்று நாசா கூறுகிறது.
newstm.in