ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா...200 ஆடுகள்.. 1800 கிலோ மட்டன்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் பொங்களாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மலையாம்பட்டி கிராமத்தில், ஆலமரத்துக்கு அடியில் இந்த மலையாள தெய்வமான பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் நடைபெறும் இந்த திருவிழாவில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு, நேர்த்திக்கடனுக்காக, ஆடுகளை பலியிடுவது வழக்கம்.
திருவிழா ஏற்பாடு முதல் கறிவிருந்துவரை அனைத்து வேலைகளையும் ஆண்களே இழுத்துப்போட்டுக்கொண்டுசெய்வார்கள்.. கோயிலுக்கு சொந்தமான பொருள்களைக்கூட பெண்கள் தொட அனுமதிப்பதில்லையாம். அதுமட்டுமல்ல, கோயில் இருக்கும் பகுதிகளில்கூட பெண்களை அனுமதிப்பதில்லையாம். இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அதாவது, 200 வருஷத்துக்கு முன்பு கெடமலையில், பொங்களாயி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அடைமழை பெய்திருக்கிறது. அந்த நேரம் பிரசவ வலியும் வந்துள்ளது. ஆனால், குடும்பத்தினர் யாருமே உடனில்லாததால், அபயக்குரல் எழுப்பியிருக்கிறார். இவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் உதவிவில்லையாம். இறுதியில், அங்குள்ள அரச மரத்தடியிலேயே விழுந்துவிட்டார்.
இறுதியில் 2 ஆண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஆனால் அந்த குழந்தைகளுமே இறந்துவிட்டன.. தனக்கு யாருமே உதவி செய்யாததால்தான், 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக நினைத்து பொங்களாயி சாபம் விட்டாராம். குழந்தை பாக்கியம் இல்லாமலும், பசி பட்டினியாலும் தவிக்க வேண்டும் என்று சாபம் விட்டு மலை மேல ஏறி சென்றுவிட்டாராம்.. அதற்கு பிறகு நிறைய பேருக்கு அந்த கிராமத்தில் குழந்தை பிறக்காமலேயே இருந்திருக்கின்றன.
கொல்லிமலையில் இருந்து கெடமலைக்குப் போன மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாட்டி, மலையாம்பட்டிக்கு வந்தபோதுதான், பொங்களாயி விட்டு சென்ற சாபம் பற்றி ஊர் மக்களுக்கு சொல்லியிருக்கிறார்.. அந்த பெண்ணை அம்மனாக நினைத்து கும்பிட்டால் எல்லாம் நல்லபடியா நடக்கும்.. ஆனா, இந்த பூஜையில பெண்கள் யாரும் கலந்துக்கக்கூடாது. ஆண்களே எல்லாத்தையும் செய்யணும் என்று சொல்லிவிட்டு சென்றாராம். அந்த பாட்டி சொன்னபடியே செய்தபிறகுதான், அந்த ஊர்ல குழந்தை சத்தமே கேட்டதாம்.

.png)