1. Home
  2. தமிழ்நாடு

ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே கொடுக்கப்படும்..!

1

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் மூன்று நாள்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக ஆவின் நிறுவனம் பால் விநியோகம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எதிர்வரும் கன மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்க்கண்ட ஆவின் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

  • அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம்
  • அண்ணாநகர் குட்நஸ் டவர் பூங்கா பாலகம்
  • மாதவரம் பால்பண்ணை பாலகம்
  • வண்ணாந்துரை பாலகம் மற்றும் பெசன்ட் நகர் பாலகம்
  • வசந்தம் காலனி பாலகம், அண்ணாநகர் கிழக்கு
  • சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்
  • விருகம்பாக்கம் பாலகம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)
  • C.P.இராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்

எதிர்வரும் கன மழையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் நடைபெற மேற்கண்ட அனைத்து பாலகங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சம் 4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் ஆவின் பாலகங்களில் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரில் தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like