ஒரே நொடியில் கோடீஸ்வரரான நபர்..!
2020ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள கோலாங்கில் ஜோசுவா என்பவர் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் ஒரு பெரிய கல் விழுந்தது.
அந்த கல் நிலத்தை பிளந்து 15 செ.மீ ஆழத்திற்கு சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோஷ்வா, அந்த கல்லை எடுத்து, அது பூமியில் இருக்கக்கூடிய கல் இல்லை என்பதை உறுதி செய்தார்.
இது பின்னர் ஆய்வு செய்யப்பட்டு சுமார் 2 கிலோ எடையும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என கண்டறியப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஜாரெட் காலின்ஸ் என்ற தொழிலதிபர் இந்தோனேஷியா சென்று இந்த மிக அரிதான கல்லை இந்திய மதிப்பில் சுமார் 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
சவப்பெட்டி தயாரிப்பாளராக இருந்த ஜோஷ்வா, ஒரே இரவில் விழுந்த ஒரே ஒரு விண்கல் மூலம் ரூ.14 கோடிக்கு கோடீஸ்வரரானார். ஜோஷ்வா, "நான் சவப்பெட்டிகள் செய்வேன். அதில், எனக்கு அதிக வருமானம் கிடைக்கவில்லை. இப்போது என் வாழ்க்கையே மாறிவிட்டது. எனக்கு கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை தேவாலயம் கட்ட பயன்படுத்த விரும்புகிறேன்," என்றார்.