1. Home
  2. தமிழ்நாடு

இலவச பஸ் பயணத்திற்காக பெண் போல பர்தா அணிந்த ஆண்..!

1

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தர்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சம்சி பஸ் நிலையத்தில் பர்தா அணிந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவரது உருவ அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்தன. இதையடுத்து, சில பெண்கள் அவர் அருகே சென்று, பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும் படி கூறினார். இதற்கு அவர் மறுத்தார். சில பெண்கள் வலுக்கட்டாயமாக அவரது பர்தாவை விலக்கியபோது, அவர் பெண்ணல்ல, ஆண் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இலவசமாக பஸ்சில் பயணிப்பதற்காக, பர்தா அணிந்து வந்ததாக அந்த நபர் கூறினார்.

Trending News

Latest News

You May Like