ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு..!
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 71.27 சதவீத வாக்குகள் பதிவாகின. கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
இடதுசாரி கூட்டணி 2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். சுரேஷ் கோபி 37,766 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.