1. Home
  2. தமிழ்நாடு

பெரிய விமான விபத்து நிகழ வாய்ப்பு... முன்பே கணித்த பிரபல ஜோதிடர்!

1

குஜராத்தில் இருந்து பிற்பகல் 1:30 மணிக்கு AI171 ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. விமானம் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் மாணவர் விடுதியிலும் புகுந்தது. இதனால் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கியது. 

இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஷர்மிஷ்டா கடந்த வாரமே இதுகுறித்து முன்னறிவிப்பு செய்திருந்தார். அப்போது பெரிதாக கவனிக்கப்படாத அவரது ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. விமான விபத்து மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் சாத்தியமான அழிவு குறித்து அவர் எச்சரித்திருந்தார். கடந்த மாதம் கிரக நிலைகளைக் கணித்து, பெரிய விமான விபத்து நிகழ வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மீண்டும் கடந்த வாரம் ட்வீட் செய்த அவர், குரு, மிருகசீரிடம் மற்றும் ஆர்த்ரா நட்சத்திரத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ஆனால் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையில் பற்றாக்குறை இருக்கும். பெரிய விபத்து நிகழ வாய்ப்புள்ளது என்ற எனது கடந்த மாத கணிப்புக்கு இன்னமும் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். விமான விபத்துகள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும், இது தலைப்புச் செய்தியாகும் என்றும் ஷர்மிஷ்டா கூறியிருந்தார். விபத்துக்குப் பிறகு மீண்டும் ட்வீட் செய்த அவர், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்தில் பல உயிர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குரு இன்னும் ஆர்த்ராவில் நுழையவில்லை, இந்தியாவின் செவ்வாய் மகா தசா இன்னும் தொடங்கவில்லை - ஆனால் ஏற்கனவே நிறைய தொடங்கிவிட்டது. இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளார்.



 

Trending News

Latest News

You May Like