1. Home
  2. தமிழ்நாடு

அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள்….. ராமர் கோயிலில் ரஜினிகாந்த்..!

1

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (ஜனவரி 22) இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. 

இவ்விழாவில் கலந்து கொள்ள 7000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நடிகர் ரஜினி, ரன்பீர் கபூர், ரிஷப் செட்டி, ஜாக்கி ஷெராப், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்காக நேற்று இரவே பல நட்சத்திரங்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.திரை நட்சத்திரங்களான, ரஜினிகாந்த், தனுஷ், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, அனுஷ்கா சர்மா, அலியா பட், ரன்பிர் கபூர் என பலரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், இருவரும் நேற்று மாலை அயோத்திக்கு கிளம்பினர்.
அதேபோல தனுஷ், தன்னுடைய மகனான யாத்ரா உடன் சென்றார்.

வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு, தோளில் துண்டு ஒன்றை போர்த்திக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பக்தி மயத்துடன் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்குள் நுழையும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அயோத்திக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவரது நண்பரும் பாலிவுட் நடிகருமான அனுப்பம் கெர் சந்தித்த புகைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், ராமர் கோயிலுக்குள் ரஜினிகாந்த் செல்லும் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

பகவான் ஸ்ரீ ராமர் மீது அளவு கடந்த பக்தி கொண்ட அமிதாப் பச்சன் இன்று நடைபெற உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு முதல் ஆளாக சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

1

இந்நிலையில் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ஒதுக்கப்பட்டு, ரஜினி மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். ஆனால், அவரது குடும்பத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டனர். சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் குடும்பத்தினரை, அருகில் அமர வழிவகுக்கும்படி, நிர்வாகி ஒருவரிடம் ரஜினி கேட்டுக்கொண்டார்.

Trending News

Latest News

You May Like