மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் ஒர் பார்வை..!
மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் ஒர் பார்வை ...
- இந்திய பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட்டை ₹1.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
- இலங்கை பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவை ₹4.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி
- ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை ₹24.75 கோடி என்ற இமாலய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
- இந்திய வீரர் ஷிவம் மாவியை ₹6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணி!
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வை ₹5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி!
- மே.இ.தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்பை ₹11.5 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தது பெங்களூரு அணி!
- இந்திய வீரர் சேத்தன் சக்காரியாவை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
- இந்திய வீரர் கே.எஸ்.பரத்தை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
- இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்சை ₹4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
- நியூசிலாந்து வீரர் டேர்ல் மிட்சேலை ₹14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
- ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
- இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ₹11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
- ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
- கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.
- ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஓமர்சாயை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி
- சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர்.. ₹4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி
- நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
- அடிப்படை விலையான ₹1.5 கோடிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
- ஐபிஎல் 2024 மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
- ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ₹6.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!
- இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ₹4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி