1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சுற்றுலாத்தலமாக மாறியுள்ள திகில் நிறைந்த பொம்மைத் தீவு..!

1

ஒரு பொம்மை பார்க்கவே மோசமா, அழுக்கா, ரத்த கறையோட இருந்தால் எப்படி இருக்கும்….இந்த மாதிரி அகோரமான பொம்மைகள் நிறைந்த தீவு தான் பொம்மைத் தீவு. இந்த பொம்மைகளுக்கு பின்னாடியும், இந்த தீவுக்கு பின்னாடியும் ஒரு மர்மம் உள்ளது. அது என்னவென்று இந்த கட்டுரையில் காணலாம்….

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் பக்கத்தில் தான், இந்த விசித்திரமான தீவு உள்ளது. இந்த தீவில் சின்னச் சின்ன வீடு, மரம், செடி என்று பார்க்கும் இடம் அனைத்தும் பொம்மைகளாக தொங்கிக் கொண்டு இருக்கும். கால் மற்றும் கைகள் உடைந்த மாதிரி, ஏன் தலை கூட இல்லாமல் அதிக பொம்மைகள் அத்தீவில் காணப்படுகின்றன. சாதாரண தீவு இப்படி திகில் தீவாக மாறியதற்கு பின்னால் ஒரு கதை உண்டு.

1950-களில் இந்த தீவுக்கு பக்கத்தில் வாழ்ந்து வந்த டான் ஜூலியன் எனும் விவசாயி, மது அருந்துவதற்காக இந்த இடத்துக்கு வருவதுண்டு. அப்பொழுது ஒரு நாள், ஆற்றங்கரையில், எனக்கு பொம்மை வேண்டும் அப்பா என்று ஒரு சின்ன பெண்ணின் குரல் கேட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒரு பொம்மையும் தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த, அந்த விவசாயி, அடுத்த நாள் ஊருக்கு திரும்பி நூற்றுக்கணக்கில் பொம்மைகள வாங்கி வந்துள்ளார். அதை தீவு முழுக்க கட்டித் தொங்க விட்டுள்ளார். அதே போல, தொடர்ந்து பொம்மைகள வாங்கி வாங்கி தீவில் கட்டினாராம். 50 வருடம் கழித்து மர்மமான முறையில விவசாயி ஜூலியன் இறந்துட்டதாகவும், அதே ஆற்றில் அவரோட சடலம் கிடந்ததாகவும் பக்கத்து ஊர் மக்கள் கூறுகிறார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த தீவை நெருங்கே அனைவரும் அஞ்சினார்கள்.

அந்த தீவில் ஏதோ மர்மம் இருப்பதாகவும், அந்த தீவை கடந்து யார் சென்றாலும் ஒரு சின்ன பெண்ணின் அழு குரல் கேட்பதாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்த தீவை வீடியோ எடுக்கச்சென்ற ஒரு சில டூரிஸ்ட்டும், யூடியூப் பிரபலங்களும் தங்களுக்கு எதுவுமே ஆகவில்லை, அந்த தீவில் எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள். அதனால், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு, சமீபத்தில் அதிகம் பேர் அந்த தீவுக்கு படையெடுத்து செல்கிறார்கள். திகில் நிறைந்த பொம்மைத் தீவு, தற்போது பிரபல சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. அந்த தீவுக்கு செல்லும்போது, உடன் ஒரு பொம்மையையும் வாங்கிச் சென்று அங்குள்ள மரத்தில் கட்டிவிட்டால் தீவில் உள்ள பேய் எதுவும் செய்யாது என்றும் உள்ளூர் மக்கள் கதை சொல்கிறார்கள். உண்மையாகவே அங்க இருக்கும் பொம்மைகளுக்கு பின்னால் அந்த சின்ன பெண்ணின் பேய் இருக்கா? இல்லை வெறும் கட்டுக்கதைகளா என்று அத்தீவுக்கு சென்று பார்த்தால் மட்டுமே அறிய முடியும்….

Trending News

Latest News

You May Like