50 வயதாகியும் திருமண செய்து கொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் திருமண வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலர் உள்ளனர். அதில் முன்னனி நடிகைகளான அனுஷ்கா ஷெட்டி, கிரண், திரிஷா, டாப்ஸி, ஸ்ருதிஹாசன், நக்மா, கோவை சரளா, ஆண்ட்ரியா என பல நடிகைகள் உள்ளனர்.
அந்த வகையில் 50 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை சித்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ‘புதுப்புது அர்த்தங்கள்‘ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து ‘புது வசந்தம், மனு நீதி, உன்னை சொல்லி குற்றமில்லை, அர்ச்சனா ஐ.ஏ.எஸ், படையப்பா‘ என பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நடிகை சித்தாரா சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது ஒருவரை காதலித்துள்ளார்.
ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அந்த நினைப்பிலேயே தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும் இவர் தன் வாழ்வின் துவக்கத்திலேயே திருமணம் செய்து கொள்ள கூடாது என முடிவு செய்திருந்ததால் அந்த முடிவில் இருந்து அப்படியே இருப்பதாகவும் கூறுகிறார்கள்.