"ஒரு நல்ல கலைஞனுக்கு இப்படி ஒரு சாவா?"

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 42. இரு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார்.
வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறப்பு குறித்து பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
”என்னுடன் 19 வருடங்களாக மேடைகளில் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். ரசிகர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக நகைச்சுவை செய்து மக்களைக் கட்டிப் போட்டுச் சிரிக்க வைப்பார்.
Actor #RoboShankar’s Condolence Message To #Vadivelbalaji Death#RIPvadivelbalaji pic.twitter.com/q2Gk1tGZmn
— Priya - PRO (@PRO_Priya) September 10, 2020
10 நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் விரைவில் மீண்டு வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார். அடுத்த 10 நாள்களில் இப்படியொரு செய்தி வந்திருப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை. அவருக்கு அழகான குழந்தைகள் உண்டு. நல்ல கலைஞனுக்குக் கூட இப்படியொரு கொடூரமான சாவா என்று கடவுளிடம் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார்.