1. Home
  2. தமிழ்நாடு

வரைவில் நம் நாட்டில் பெட்ரோல் இறக்குமதி இல்லாத ஒரு நாள் வரும் : அமைச்சர் நிதின் கட்கரி..!

1

டொயோட்டா இன்னோவா எம்பிவி (Toyota Innova MPV) காரின் பெட்ரோல் பயன்பாடு இல்லாத, எத்தனால் மூலம் இயங்கும் மாடலை நிதின் கட்கரி நேற்று (ஆகஸ்ட் 29) வெளியிட்டார். எத்தனால் மூலம் இயங்கும் கார் வழக்கமான பெட்ரோல் மாடலைப் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், அதில் 100% எத்தனால் எரிபொருளை நிரப்பி இயக்கும் வகையில் 2.0 லிட்டர் ப்ளெக்ஸ் எரிபொருளுக்கான ஹைப்ரிட் எஞ்சின் இருக்கிறது.

நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: திறன் வாய்ந்த எத்தனால் உற்பத்தியாளர்களின் மூலம் மூன்று மாதங்களுக்குள் இந்தியா 20 சதவீத எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டு இலக்கை எட்ட முடியும். எத்தனால் உற்பத்தியில் உலகின் நம்பர் 1 உற்பத்தியாளராகவும் இந்தியா மாற முடியும். கார்கள், பைக், ஆட்டோ அனைத்தும் 100 சதவீத எத்தனாலில் இயங்க வேண்டும் என்பதே எனது கனவு. நாட்டில் பெட்ரோல் இறக்குமதி இல்லாத ஒரு நாள் வரும், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலம் வாகனங்கள் ஓடும். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like