இறப்பிலும் இணை பிரியாத தம்பதி... ஒரே நாளில் உயிரிழந்த சோகம்!
ஈரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(92). பத்திர எழுத்தர் ஆக வேலை பார்த்தவர். வயது முதிர்ந்த நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை அவர் காலமானார்.
இதனால் வேதனையில் இருந்த அவரது மனைவி மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்தது உறவினர்கள் ஊர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.